தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்த சிசிடிவி வீடியோ ஒன்று வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாவண்ய லஹிரி என்ற பெண் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஷம்ஷாபாதின் ரல்லாகுவா என்ற பகுதியில், சாப்ட்வேர் எஞ்சினியராக பணிபுரிந்து வந்தவர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கணவர் வெங்கடேஷ்வரலு செய்த சித்ரவதைகளை குறிப்பிட்டு விட்டு கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, தனியார் ஏர்லைன் நிறுவனத்தில் பைலட்டாக பணிபுரியும் வெங்கடேஸ்வரலுவைக் காதல் திருமணம் செய்துகொண்ட லாவண்யாவுக்கு குழந்தை இல்லை என்பதால் அவரது கணவரும் கணவரின் குடும்பத்தார்களும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல நாட்கள் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மகளின் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது வீட்டிற்கு சென்ற லாவண்யாவின் பெற்றோர்கள், அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்தபோது, அதில் லாவண்யாவை அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தும் காட்சியை கண்டதும் அதிர்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி